search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம்"

    ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடம் இருந்த பாலித்தீன் பைகளை வாங்கி துணி பைகளை தாசில்தார் வழங்கினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் பாலிதீன் பைகள் உபயோகத்தை நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பாலித்தீன் பைக்கு தடை விதித்ததை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜாண்சன்தேவசகாயம் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் ஜாண்சன் தேவ சகாயம், மண்டல துணை தாசில்தார்கள் பிரபாகர், கண்ணன், முதுநிலை வரைவு ஆய்வாளர் ஆதிராமலிங்கம், மண்டல நில அளவை அலுவலர் மனோகரன், வருவாய் ஆய்வாளர்கள் திருமணி ஸ்டாலின், ஆகஸ்டீன்பாலா மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பாலித்தீன் பைகளை அகற்றினர்.

    அப்போது தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடம் இருந்த பாலித்தீன் பைகளை வாங்கி துணி பைகளை தாசில்தார் ஜாண்சன் தேவசகாயம் வழங்கினார். இது தொடர்பாக தாசில்தார் ஜாண்சன்தேவசகாயம் கூறுகையில், "தமிழக அரசால் பாலித்தீன் பை தடை செய்யப்பட்டுள்ளதால் தாலுகா அலுவலகத்துக்கு பாலித்தீன் பைகளுடன் வர அனுமதி இல்லை. மீறி பாலித்தீன் பைகளுடன் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
    ×